தனியார் துறையினருக்கு விரைவில் சம்பள உயர்வு
* பாலுக்கு உத்தரவாத விலை
* கூடுதல் நிவாரணங்கள் விரைவில்
* மே முதல் புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு- பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 2/3 பெரும்பான்மையுடன் 10 வருடங்களில் நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாட்களில் மேற்கொள்ள முடிந்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் தலை சிறந்த சாதனையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய எஞ்சிய வாக்குறுதி களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இலங்கை - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு ஒப்பந்தங்கள் நேற்று இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.