19 சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை
மக்களின் இறைமை, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகிறது
சட்டமா அதிபர் நேற்று உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு
முன்மொழியப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நாட்டு மக்களின் இறை மையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் இது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென சட்டமா அதிபர் யுவாஞ்சன் வசுந்தரா விஜேதிலக நேற்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புள்ள மூன்று கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.