பிரதமர் இன்று யாழ். விஜயம்; ஹாட்லி கல்லூரியில் ஆய்வு கூடம் திறப்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இன்று, மாலை (27) 2.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைப்பார். கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனும் இதில் கலந்துகொள்வார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை வருகை தருகின்றார். காலை 10.00 மணிக்கு மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
அரசியல் மேடைகளில் பேசுவதோடு மாத்திரம் நின்றுவிடாது வடக்கு மக்களின் பிரச்சினைகளையும் எமது பதவிக் காலத்திற்குள் தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தி அரசியலமைப்பை திருத்தவும் தேர்தல் முறையை மாற்றவுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களில் ஒரு பகுதியினர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர். இருந்தாலும் தொடர்ந்தும் அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கவும் எதிர்க்கட்சியின் பொறுப்பை நேர்த்தியாக முன்னெடுக்கவும் இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
11 கெபினட் அமைச்சர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கதிர்காம புனித நகருக்குச் சென்று மதக்கடமைகளில் நேற்று ஈடுபட் டார். முதலில் கிரிவிஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு அவர் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். கிரிவிகாரை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மின்த தேரரையும் சந்தித்த அவர் சுகநலன் விசாரித்தார்.