03052024Fri
Last update:Thu, 18 Apr 2024

இலங்கை: புதிய அரசியல்யாப்பை உருவாக்கும் நடவடிக்கை துவங்கியது

parliament 1இலங்கையில் நாடாளுமன்றத்தை அரசியல் யாப்பு உருவாக்கச் சபையாக இயங்கச் செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்துள்ளார்.


இலங்கையின் வடக்கு கிழக்கே 65,000 வீடுகள் கட்ட அரசு திட்டம்

151222131020 lanka north jaffna 512x288 bbc nocreditஇலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு அதிகமாக இருந்தாலும் முதல் கட்டமாக இதை முன்னெடுக்க அரசு தீர்மானித்துள்ளது என மீள்குடியேற்றத்துறை துணை அமைச்சர் ஹிஸ்புல்லா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்கு முன் தமிழக மீனவர்கள் 104 பேர் விடுதலை: இலங்கை அமைச்சர் அறிவிப்பு

Tamil DailyNews 5811687707902திருச்சி: பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவர் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'சம்பூர் பள்ளிக்கூடங்களை கடற்படை இன்னும் விடுவிக்கவில்லை'

150822175115 sampur president 512x288 bbc nocreditஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றதிற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் கடற்படை வசமுள்ள அரசாங்க பாடசாலைகள் இதுவரை விடுவிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

உளவுத்துறையின் எச்சரிக்கை எதிரொலி: கடலோர பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு

Tamil DailyNews 4312053918839குமரி: உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாட்டின் கடலோர பகுதி வழியே தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கடலோரங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.