30042024Tue
Last update:Thu, 18 Apr 2024

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் தொழில்வாய்ப்புகள்

WICKREMESINGHEஎதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் கீழ் குளியாப்பிட்டியவில் ஜேர்மன் வொக்ஸ்வேகன் வாகன உற்பத்தி தொழிற்சாலையொன்று நிறுவப்படும்.

 இந்த தொழிற்சாலையில் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் அதேநேரம், இதன் மூலம் 10 இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும். மேற்படி வெளிநாட்டு

முதலீட்டுக்காக அரசாங்கத்தின் பொரு ளாதாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இத்தொழிற்சாலையை ஆரம் பிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த அரசாங்கத்தில் இதே தொழிற் சாலையை இலங்கையில் நிறுவுவதற்கான சந்தர்ப்பம் கோரி அதன் உரிமையாளர்கள் குழுமம் இலங்கை வந்தபோதும் அதிக தரகுக் கூலி கேட்கப்பட்ட காரணத்திற்காக அவர்கள் திரும்பி போயுள்ளனர்.

ஆனால் தற்போது வொக்ஸ்வகன் நிறுவனம் அந்த தரக்குக் கூலி பெறுமானத்திற்கு சமனான நிதியை தொழிற்பயிற்சி நிறுவனமொன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்காக நன்கொடையாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய காத் திருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் கூறினார்.