14102025Tue
Last update:Fri, 10 Oct 2025

ஜனவரி முதல் தண்டப் பணம் ரூ 5,000

train ticketரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வோரிடம் ரூ 5,000 தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது.

ரயிலில் பயணம் செய்வோர், அதற்கான பயணச்சீட்டை கொள்வனவு செய்யாது பயணித்தமை உறுதியாகும் பட்சத்தில், அதற்கான தண்டப் பணமாக ரூபா 5,000 விதிக்கப்படுவதோடு, குறித்த பயணச்சீட்டின் இரு மடங்கையும் செலுத்த வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த சட்டம் எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சு, இதனை கண்டிப்பான முறையில் அவதானிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.