14102025Tue
Last update:Fri, 10 Oct 2025

இலங்கை மீனவர்கள் 36 பேரும் விடுதலை

fisherman releasedஅத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டு இந்தியச் சிறை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இன்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 36 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானம் பல நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்த போதிலும், சட்ட ரீதியான முன்னெடுப்புகள் காரணமாக விடுதலை செய்வதற்கான திகதி பிற்போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 126 இந்திய மீனவர்கள் கடந்த நவம்பர் 09ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டதோடு, நவம்பர் 13ஆம் திகதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.