02052025Fri
Last update:Wed, 23 Apr 2025

33 கைதி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றம்

exam 0தற்போது நடைபெறும் ஜீ. சீ. ஈ. சாதாரண தரப் பரீட்சையில் 33 சிறைக் கைதிகள் தோற்றி வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இக் கைதிகள் பரீட்சை எழுதும் பிரதான நிலையம் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

எல். ரீ. ரீ. ஈ. சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் மாணவர்கள் இங்கு தமிழ் மொழியில் பரீட்சை எழுதுகின்றனர். களுத்துறை சிறைச்சாலையில் 07 மாணவர்களும், வட்டரக்க திறந்த வெளிச் சிறைச்சாலையின் 11 மாணவர்களும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

பதுளை சிறைச்சாலையின் கைதி மாணவர் ஒருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்பகுதி பாடசாலை ஒன்றில் பரீட்சை எழுதுவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.