14102025Tue
Last update:Fri, 10 Oct 2025

ஜனவரி 25-30; சுகாதார வாரம் பிரகடனம்

health weekசுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு இம்மாதம் 25 ம் திகதி தொடக்கம் 30 ம் திகதி வரை சுகாதார வாரமாக பிரகடனம் செய்துள்ளது.

சுகாதார அமைச்சு அரச சேவையில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அதனூடாக நாட்டு மக்களுக்கு சிறந்த அரச சேவையினை வழங்குவதனை நோக்காகக் கொண்டே இவ்வாரம் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச அலுவலகங்கள் அனைத்திலும் இவ்வாரத்தில் சுகாதார பழக்க வழக்கங்களை மேம்படுத்தக்கூடிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டு தோற்றா நோய்கள் சம்மந்தமாகவும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்திற்கு அனைத்து அரச நிறுவன தலைவர்களும் ஊழியர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அதனூடாக எமது நாட்டினை ஒரு சிறந்த ஆரோக்கியமுள்ள ஒரு வளமான நாடாக கட்டியெழுப்ப அனைவரும் முன்வர வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்கின்றது.