28052023Sun
Last update:Fri, 26 May 2023

தமிழ்நாடு மீனவர்கள் ஐவர் கைது

05 indian fisherman arrestedஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஜந்து மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) நள்ளிரவு கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்த போது இவர்கள், இரவு நேர ரோந்து நடைவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால்  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் கடற்படை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்கள்  தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து விசைப்படகுகளில் கச்சதீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி உபகரணங்கள் என்பன இன்று (03) யாழ் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என யாழ் மாவட்ட நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் அ. ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.