30042025Wed
Last update:Wed, 23 Apr 2025

சீன முதலீட்டு திட்டங்களை நெறிப்படுத்த மூவரடங்கிய விசேட உயர்மட்டக் குழு

news 3இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கவும் துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கிடம் நேற்று தெரிவித்தார்.

இலங்கையில் அமைக்கப்படும் இந்த உயர்மட்ட குழு 03 பேரை உள்ளடக்கியதாக இருக்குமென்றும் பிரதமர் சீன ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

விசேட திட்டங்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோர் இந்த விசேட குழுவில் அங்கம் வகிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.