19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

போக்குவரத்து துறையில் ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். – ஜனாதிபதி

01 1 02Marchபஸ் உரிமையாளர்கள், சாரதிகள் ஆகியோரிடம் கப்பம் அறிவிடுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நீண்டகாலமாக நிலவும் இவ் ஊழல் நிலைமைபற்றி புதிய அரசு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டின் அனைத்துத் துறைகளிலும்  ஊழல், மோசடி, முறைகேடுகள் மட்டுமன்றி மோசமான நிலைமைகளை மாற்றுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள அரசு என்ற ரீதியில் எதிர்காலத்தில் இவற்றிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தார்.

போக்குவரத்து துறையில் நிலவும் பிரச்சினைகள்பற்றி நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கங்கள் இவற்றிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாதபோதும் அனைத்து துறைகளைப் போன்றே போக்குவரத்து துறையிலும் ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு புதிய அரசு தைரியமாக தலையீடுகளை மேற்கொள்ளுமென ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் 09 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண போக்குவரத்து அமைச்சர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றதுடன், அவ்வந்த மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகள்பற்றி விரிவாக விடயங்கள் சமர்பிக்கப்பட்டன.

09 மாகாணங்களாக செயற்பட்டபோதும் நாடு என்ற ரீதியில் ஒரே கொள்கையின் கீழ் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், போக்குவரத்து துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அனைவரும் ஒரே கொள்கையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

ஒன்றிணைந்த நேர அட்டவணை நடைமுறைப்படுத்தப்பட்டபோதும் பல சந்தர்ப்பங்களில் ஒரே முறையில் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுதல் மற்றும் தனியார் பஸ் வண்டிகள் மந்தகதியில் சேவையில் ஈடுபடுதல் என்பன காரணமாக எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாமை, கொழும்பு நகரத்தில் பஸ் வண்டிகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில் நிலவும் அசௌகரியங்கள், ஏனைய வசதிகள் இல்லாமை, குறுந்தூர பஸ் வண்டிகள் மற்றும் நெடுந்தூர பஸ் வண்டிகளுக்காக புறம்பான பஸ் தரிப்பு நிலையங்களை நிர்மாணித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் இங்கு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா உள்ளிட்ட மாகாண போக்குவரத்து அமைச்சர்கள், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் சோமவீர, மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.