29032024Fri
Last update:Mon, 04 Mar 2024

பண்ணை கூட்டுறவை மேம்படுத்தும் உடன்படிக்கையில் நியூசிலாந்தும் இலங்கையும் கைச்சாத்து

Presidential Media Unit Common Banner 1இலங்கையில் பண்ணை மேம்பாட்டு பயிற்சி முன்னெடுப்புக்கான ஒரு கூட்டு உடன்படிக்கையில் இலங்கையும் நியூசிலாந்தும் இன்று (24) கைச்சாத்திட்டுள்ளன.

இவ்வுடன்படிக்கை இலங்கை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கும் நியூசிலாந்து வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இடையே, 2013 நவம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட பண்ணை கூட்டுறவு உடன்படிக்கையின் கீழ் கைச்சாத்திடப்பட்டது.

இந்த கூட்டு உடன்படிக்கையின் கீழ் இலங்கை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பண்ணை அபிவிருத்தி விரிவாக்கல்  சேவைகளை வழங்குவதற்கான அதன் இயலுமையை பலப்படுத்துவதற்கும் இலங்கை பண்ணை மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் ஊடாக அதன் சிறு பண்ணை வேளாண்மை வாடிக்கையாளர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு உதவ பங்காளர்கள் இணைந்து முடிவுசெய்துள்ளனர்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.தயா ஏக்கநாயக்க இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் நியூசிலாந்து வெளிவிவகார, வர்த்தக அமைச்சின் சார்பில் நியூசிலாந்தின் இலங்கைக்கான உயரிஸ்தானிகர் கிரஹாம் மோட்டன் அவர்களும் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஓக்லண்ட் மிருகக்காட்சி சாலைக்கு இரண்டாவது யானைக் குட்டியை அன்பளிப்புச் செய்வதற்கான ஒரு ஆவணமும் இங்கு கைச்சாத்திடப்பட்டது. இலங்கை நியூசிலாந்திற்கு ஏற்கனவே ஒரு யானைக் குட்டியை அன்பளிப்புச் செய்துள்ளது.

இந்த உடன்படிக்கையின் கீழ் வன சீவராசிகள் பாதுகாப்பு மற்றும் இயல் திறன்களை கட்டியெழுப்பும் துறையிலும் கூட்டுறவை தொடர்வதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது.