30042025Wed
Last update:Wed, 23 Apr 2025

பீல்ட் மார்ஷல் பாராளுமன்ற உறுப்பினர்

sarath fonsekaபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (09) சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற வெற்றிடத்திற்கே அவர் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி அமைச்சர் M.K.D.S குணவர்தன காலஞ் சென்றதை அடுத்தே குறித்த வெற்றிடம் உருவானது.

இது தொடர்பில் நேற்று (08) இடம்பெற்ற ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ஐ.தே.க. - ஜனநாயகக கட்சி இணைந்து செயற்படும் வகையிலான ஒப்பந்தம் ஒன்று கடந்த வாரம் (03) கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, அவருக்கு அமைச்சு பதவி ஒன்றும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.