01052025Thu
Last update:Wed, 23 Apr 2025

கிலோ தங்கத்துடன் யாழ். பெண் ஒருவர் கைது

gold biscuitசுமார் 7 கிலோ கிராம் தங்கத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதுடைய குறித்த பெண்ணை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தின் சங்கானை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஏ.எஸ்.பி. ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதன்போது, குறித்த பெண்ணிடம் 100 கிராம் கொண்ட 70 தங்க பிஸ்கட்கள் காணப்பட்டதாகவும் இதன் பெறுமதி, சுமார் ரூபா 39 மில்லியன் (ரூபா 39,340,000) என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்தே, குறித்த நபரை கைதுசெய்ததாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.