01052025Thu
Last update:Wed, 23 Apr 2025

சுகாதார அமைச்சின் உடற் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில்

Persident 01 19ஜனவரி 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (27) முற்பகல் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

தேசிய சுகாதார விளையாட்டு நிகழ்ச்சித்திட்டம் என்ற வெளியீடு இந்நிகழ்வின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களினால் அரசாங்க ஊழியர்களுக்கான “சரீர சுவதா“ கையேடும் இருவட்டும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தொற்றாத நோய்களைக் குறைக்கின்ற ஒரு நடவடிக்கையாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின் பேரில் விளையாட்டு அமைச்சினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் சுகாதாரத்துறை பிரதியமைச்சர் பைசல் காசிம், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டீ.எம்.ஆர்.பீ.திசாநாயக, சுகாதாரத் துறை அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம ஆகியோரும் கலந்துகொண்டனர்.

07

06