01052025Thu
Last update:Wed, 23 Apr 2025

சவூதி இளவரசர் இலங்கை வருகை

img 20160125 wa0001 25012016 kaa cmyசவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை 27ம் திகதி கொழும்புக்கு வருகை தருகின்றார்.

நாளை கொழும்புக்கு வந்து சேரும் சவூதி அரேபிய இளவரசர் அல் சவூத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் அழைப்பில் அப்துல் காதர் மசூர் மௌலானாவின் ஏற்பாட்டில் இலங்கை வரும் இளவரசர் கொழும்பில் நடைபெறும் கிழக்கில் முதலிடுங்கள் சர்வதேச மாநாட்டிலும் பங்குபற்றவுள்ளார்.