02052025Fri
Last update:Wed, 23 Apr 2025

எல்லை தாண்டி மீன்பிடித்தால் வழக்கு

sri lanka navy arrested 86 indian poachersஇலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் வகையிலான வெளிநாட்டு மீனவர் சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பிலான, சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இன்று (20) பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி அப்ரூ உச்சநீதிமன்றில், குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றில் அறிவித்ததோடு, குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்க ஆறு மாதங்கள் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இது குறித்த மனு, சிசிர டி அப்ரூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.