14102025Tue
Last update:Fri, 10 Oct 2025

ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

maithripala sirisena Dec3வரவு செலவுத் திட்டத்தின் இரண் டாம் வாசிப்பு மீதான வாக்கெடு ப்பில் ஆதரவாக வாக்களித்த அனைவ ருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாவது வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.