03052025Sat
Last update:Wed, 23 Apr 2025

தொடரும் வளிமண்டல தளம்பல்; மழை காலநிலை

stop hiv 3x2 0இலங்கை கடல் பரப்புக்கு அண்மித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் (டிச. 01-02) நாட்டின் பெரும்பாலான கடல் பிரதேங்களில் அதிக காற்றுடன் கூடிய பாரிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 2.00 மணயின் பின்னர், பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், இது சில இடங்களில் 150 மில்லிமீற்றர் ஆக காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பிரதேசம் இதன்போது சற்று கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும், இடிமின்னலுடன் கூடிய மழை மற்றும் காற்று வேகமாக வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் கடலுக்கு செல்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது நாளை (02) வரை தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.