06052025Tue
Last update:Wed, 23 Apr 2025

புனர்வாழ்வளிப்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்

janaka rathnayakaபுனர்வாழ்வு ஆணையாளர்

தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வளிக்க தயாராக இருக்கின்றபோதும், புனர்வாழ்வு தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

 கைதிகளின் புனர்வாழ்வு தொடர்பில் நீதிமன்றம் தீர்மானித்து, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கும் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அவர்களின் புனர்வாழ்வு தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

 நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமையவே புனர்வாழ்வு பெறுபவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். அதனை எமக்கு அனுப்பிவைப்பார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஏற்கனவே இவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்திருப்பதால் அவர்களுக்கான புனர்வாழ்வுக் காலம் உள்ளிட்ட விடயங்களை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

சாதாரணமாக ஒரு வருடகாலம் புனர்வாழ்வு வழங்கப்படும். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலேயே புனர்வாழ்வு வழங்கப்படுகிறது. சாதாரணமான புனர்வாழ்வு நடவடிக்கையானது ஆறு மாதங்கள் புனர்வாழ்வாகவும், எஞ்சிய ஆறுமாதங்கள் தொழில்சார் பயிற்சிகளும் வழங்கப்படும். எனினும், இவர்களுக்கு எவ்வாறான புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றமே தமக்கு அறிவிக்கும் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.