21082025Thu
Last update:Wed, 04 Jun 2025

ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில் மாதுலுவாவே சோபித்த தேரர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு….

Presidential Media Unit Common Banner 1நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின்பேரில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 தாய்லாந்து நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் சங்கைக்குரிய தேரரின் நோய் நிலைமைகள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து தனிப்பட்ட முறையில் கேட்டறிந்ததோடு, அவரை மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதுடன், இந்த சிகிச்சை நடவடிக்கைகளுக்குச் செலவாகும் செலவுகளை அரசாங்கத்தினால் வழங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார்.