07052025Wed
Last update:Wed, 23 Apr 2025

தமிழக மீனவர்கள் தீபாவளிக்கு முன் விடுதலை

fisherboat 4இலங்கையில் சிறை வைக்கப் பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் தமது தாய்நாடு திரும்புவரென மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தியமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கமைய இவர்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் நேற்று முன்தினம் (28) முதல் ஆரம்பி க்கப்பட்டுள்ளன.

சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் இவர்கள் விடுவிக்கப்படுவரென்றும் அமைச்சர் கூறினார். கொழும்பிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கடந்த வாரம் அமைச்சர் அமரவீரவைசந்தித்து தீபாவளிக்கு முன்னர் இந்திய மீனவர்களை விடுவிக்குமாறும் சட்டவிரோத படகுகளுக்கு எதிராக இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சட்டத்திற்கு இந்திய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லையெனவும் கூறியிருந்தார்.

பிரதி உயர்ஸ்தானிகரின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர், இந்திய மீனவர்களின் ஊடுருவலால் வடக்கில் வாழும் மீனவர்கள் பாரிய இன்னல் களுக்கு முகம்கொடுப்பதாக கூறி 5 ஆயிரம் மீனவர்களால் கையொப்பமிட்ட மகஜர் ஒன்று தன்னிடம் கையளிக்கப் பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அமைச்சர் இறுதிவரை ட்ரோலர் படகு பாவ னைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.