03052025Sat
Last update:Wed, 23 Apr 2025

பரராஜசிங்கம் கொலை: பிள்ளையான் கைது

pillayaan joseph pararajasingamகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான  பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 வாக்குமூலம் ஒன்றை பெறும்பொருட்டு இன்று (11) மாலை 5.00 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வருமாறு பணிக்கப்பட்டிருந்த பிள்ளையான், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலேயே அவர்  விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததோடு, அவரது கொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரிவித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பரராஜசிங்கம் கடந்த 2005 டிசம்பர் 25 ஆம் திகதி மட்டக்களப்பு மேரியாள் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனைகளில் ஈடுபட்டிந்த வேளையில், துப்பாக்கிதாரி ஒருவரால் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.