30042025Wed
Last update:Wed, 23 Apr 2025

மைத்திரி - மஹிந்த கொழும்பில் சந்திப்பு

சு.க. நெருக்கடி, பொதுத் தேர்தல் குறித்து நேரில் பேச ஏற்பாடு

Rajapaksa President Sirisenaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை புதன்கிழமை கொழும்பில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. இச்சந்திப்பு பெரும் பாலும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் எனக் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களின் ஏற்பாடுகளுக்கு அமையவே இச்சந்திப்பு இடம்பெறவி ருப்பதாகவும் அவர் கூறினார்.

இச்சந்திப்பு பெரும்பாலும் இருவருக்குமிடையில் தான் இடம்பெறும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளைக் களைவதை நோக்காகக் கொண்டே இச்சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது எனவும் அவர் கூறினார். இதேவேளை ஸ்ரீலங்கா சு. கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா குறிப்பிடுகையில், இச்சந்திப்பின்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் என்பன குறித்தும் இங்கு கலந்துரை யாடப்படும் என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்க வைப்பதற்கு ஏற்கனவே இரண்டு மூன்று தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தடவை திகதி குறிக்கப்பட்டும் இறுதித் தறுவாயில் சந்திப்பு பிற் போடப்பட்டது இவ்வாறான சூழலி லேயே புதனன்று இச்சந்திப்பு இடம் பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படு கிறது.