29032024Fri
Last update:Mon, 04 Mar 2024

சந்தேக கண்ணோடு பார்க்காதீர்; முன்னாள் புலிகள் கோரிக்கை

சமூகத்தில் இணைக்கப்பட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் தம்மை பாரபட்சமாக நடத்த வேண்டாம் என புனர்வாழ்வளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இன்னும் தாம் சந்தேகக் கண்ணோட் டத்திலே பார்க்கப்படுவதாகவும் இராணுவத்தினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

தாம் தொழில்களுக்குப் புறப்பட்டு சென்ற பின்னர் தமது வீடுகளுக்கு இராணுவம், வருகை தந்து சந்தேகக் கண்ணோட்டத்தோடு கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர்.

அனைத்து விசாரணைகளும் முடிவுற்று புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைப்பட்டுள்ள நிலையில் தாம் நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளது என்றும் பொலிஸ் பிரிவுகளில் வாழும் தம்மை பொலிசாரின் காண்காணிப்பின் கீழ் வாழ வழி சமைத்துத் தருமாறும் கேட்டுக்கொண் டனர்.

இது தொடர்பில் பதிலளித்த பிரதமர்,

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளோரை தினமும் இராணுவத்தினர் கண்காணிப்புகளுக்கு உட்படுத்துவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்