30042025Wed
Last update:Wed, 23 Apr 2025

15% VAT: மக்களுக்கு சுமை வழங்க இடமளியேன்

president my3மக்களுக்கு சுமை ஏற்படும் வகையிலான வரிகளை அவர்கள் மீது சுமத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (18) பொலன்னறுவையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான வரி ஏய்ப்புகளை மக்கள் மீது சுமத்தும் வகையிலான ஆலோசனைகளை வழங்கும் பொருளாதாரம் தொடர்பிலான ஆலோசகர்கள் இருப்பார்களானால், அவர்களது சேவை எமக்கு அவசியமில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் மே மாதம் முதல் பொருட்கள் சேவைகள் தொடர்பில் விதிக்கப்படும் வரியை (VAT) 11% இலிருந்து 15% ஆக அதிகரிப்பதற்கு நிதியமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.