19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

ஜனாதிபதி விளையாட்டு விருது மே 13இல்

colsss151837427 4042062 24022016 aff cmyஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆலோசனைக்கு அமையவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கரவின் நெறிப்படுத்தலில் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழா எதிர்வரும் மே மாதம் 13ம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மா நாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த விருது வழங்கும் நிகழ்வு தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில்:

இப்படியான விருது வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிப்பாக இந்த விருது அமையவுள்ளது.விளையாட்டு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய வீரர்கள் அவர்களுக்கு உரிய முறையில் கௌரவிக்கப்படா விட்டால் அவர்கள் சிறப்பாக விளையாடத நிலையும் ஏற்படும் நிலையுள்ளது.

இதனை கருத்தில் கொண்டே நாங்கள் இந்த விருது வழங்க தீர்மானித்துள்ளோம்.

இந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு தலைமைதாங்கும் சமன் அமரசிங்கவுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க,அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அமைச்சரின் ஊடகச் செயலாளர் பிரசன்ன அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்வரும் விருதுகள் வழங்கப்படவுள்ளன அவைவருமாறு:

வருடத்தின் சிறந்த விளையாட்டாளர், வருடத்தின் சிறந்த விளையாட்டு அணி, வருடத்தின் வீராங்கனை, வருடத்தின் வீரர், வருடத்தின் வீராங்கனை (மாற்றுத் திறனாளிகள்), வருடத்தின் வீரர் (மாற்றுத்திறனாளிகள்), வருடத்தின் கனிஷ்ட விளையாட்டு அணி, வருடத்தின் கனிஷ்ட வீராங்கனை, வருடத்தின் கனிஷ்ட வீரர்,

முறையில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வருடத்தின் சிறந்த வீராங்கனை / வீரர் (ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒருவர் எனும் அடிப்படையில்), ஜனாதிபதி வர்ண விருது,

இவ்விருதுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் பொறுப்பு குறித்த விளையாட்டுக்கு பொறுப்பான தேசிய விளையாட்டு சம்மேளனமாகும். இதற்காக வீரர்களை பெயரிடுவதற்கு தேசிய விளையாட்டு சம்மேளனத்துக்கு தமைகை கிடைப்பது 2015 ஆம் ஆண்டினுள் விளையாட்டின் மூலம் தேசிய பதக்கம் ஒன்றினை பெற்றிருந்தால் மாத்திரமே ஆகும். ஒவ்வொரு தேசிய சம்மேளனத்தின் ஊடாக வீர, வீராங்கனைகள் அதிகபட்சமாக 03 பேர் அடங்கிய விண்ணப்பங்கள் மாத்திரமே முன்வைக்க முடியும்.

வருடத்தின் சிறந்த விளையாட்டு நிர்வாகி, வருடத்தின் சிறந்த விஞ்ஞானி, வருடத்தின் சிறந்த வைத்திய அதிகாரி, விநோத விளையட்டு ஒழுங்குபடுத்தும் நிருவனம், வருடத்தின் சிறந்த தொழில்நுட்ப அதிகாரிகள் / நடுவர்கள் / போட்டித் தீர்ப்பாளர்கள், விளையாட்டில் தொழில்நுட்பம் மற்றும் துறைசார் அபிவிருத்தித் தொடர்பில் பங்களிப்பை மேற்கொள்ளல், வருடத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் வருடத்தின் விளையாட்டு விருத்தி அனுசரனை நிர்வனம், வருடத்தின் விளையாட்டு வெளியீடு,

ஏதேனும் ஒரு பிரஜையின் மூலம் 2015 ஆம் ஆண்டில் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட விளையாட்டு ஆக்கங்களை இவ்விருதுக்காக முன்வைக்கலாம். இவ் ஆக்கம் குறித்த வருடத்தில் முதன் முதலாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வெளியீட்டின் இரு பிரதிகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வருடத்தின் விளையாட்டு இலத்திரனியல் வெளியீடு, வருடத்தில் தேசிய நாளிதழில் விளையாட்டுப் பக்கம்,

ஒன்று எனும் அடிப்படையில் 12 விளையாட்டு பக்கங்களை உள்ளடக்கிய இருவெட்டுக்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி, வருடத்தின் சிறந்த வானொலி விளையாட்டு நிகழ்ச்சி, வருடத்தின் சிறந்த விளையாட்டு ஊடகவியலாளர், வருடத்தின் சிறந்த புகைப்பட பிடிப்பாளர், புலமைப்பரிசில் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு

“கிரிடா தெறிய” பெற்றோர் / சகோதரர்/ சகோதரிகள் மற்றும் பாதுகாவலர்கள் (12 வயதுக்கு மேற்பட்ட நிர்வாக மாவட்டங்கள் 25இன் வீர வீராங்கனைகள்)

“கிரிடா சுரெகும” காப்புறு திட்டம்

(அனைத்து விளையாட்டுக்களினதும் தேசிய அணிகளின் உறுப்பினர்களுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கும்), “கிரிடா செவன” ஓய்வூதிய கொடுப்பனவு, (55 வயதுக்கு மேற்பட்ட நன்மைபெறும் 10 பேருடன் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது), வருடத்தின் பிரசித்தி பெற்ற விளையாட்டு விருது, வருடத்தின் பிரசித்தி பெற்ற வீராங்கனை, வருடத்தின் பிரசித்தி பெற்ற வீரர், வருடத்தின் பிரசித்தி பெற்ற கனிஷ்ட வீராங்கனை (2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு 21 வயதுக்கு கீழ்பட்டு இருக்க வேண்டும்), வருடத்தின் பிரசித்தி பெற்ற கனிஷ்ட வீரர் (2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு 21 வயதுக்கு கீழ்பட்டு இருக்க வேண்டும்). ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.