16052024Thu
Last update:Wed, 08 May 2024

சுனாமியில் காணாமற்போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம்

tkn 08 12 nt 01 ndkஇந்தச் சம்பவம் முல்லை த்தீவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே சுனாமியில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4 இல் கல்வி கற்றுள்ளார்.

 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பலர் உயரிழந்துள்ளதுடன் இன்னும் சிலர் காணாமலும் போயினர்.

அந்த நாளில் காணாமல் போனவர் பட்டியலில் ஜெகநாதன்

குருதேவனும் இடம்பிடித்துவிட்டார்.

இவ்வாறு அனர்த்தத்தின் பின்னர் தனது மகனைக் காணவில்லை என பெற்றோர்கள் அனைத்து பதிவுகளையும் மேற்கொண்டிருந்தனர். தனது மகனை காணாமல் பெற்றோர்கள் எல்லா இடங்களிலும் முறைப்பாடு செய்துள் ளதுடன் மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள் இருந் துள்ளனர்.

எனினும் சகல சந்தர்ப்பங்களிலும் மகன் பற்றிய முயற்சிகளை எடுத்துள்ளதாக பெற்றோர்கள் குறிப்பிட்டனர்.

11 வருடங்கள் சிங்கள பிரதேசத்தில் வாழ்ந்து வந்த குறித்த இளைஞர் தற்போது தனது சொந்த மொழியான தமிழ் மொழியை மறந்து சிங்கள மொழியிலேயே பேசிக் கொண்டி ருக்கிறார்.

சுனாமி ஏற்பட்ட போது அப்போது எனக்கு வயது ஒன்பது முல்லைத்தீவிலிருந்து வவுனியா வரை தனியாக சென்று பின்னர் வவுனியாவிலிருந்து புகையிரதத்தில் ஏறி நண்பர்களுடன் சென்றேன்.

இவ்வாறு புகையிரதத்தில் சென்ற நான் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி நின்று கொண்டிருந்தேன். அப்போதுதான் நான் நிற்கும் இடம் மாகோ புகையிரத நிலையம் என தெரிய வந்தது. அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே இருந்ததது.

இடம், மொழி என எதுவுமே தெரியாமல் தனியாக நின்று கொண்டிருந்த என்னை ஒருவர் அழைத்துச் சென்று உண்பதற்கு உணவு வாங்கித்தந்தார்.

உணவு உண்ட பின்னர் சாப்பாடு வாங்கிக் கொடுத்தவர் என்னை மாகோ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு பொலிஸில் ஒப்படைக் கப்பட்ட என்னை பின்னர் தம்புள்ளையில் அலவ்வ என்ற இடத்தில் பிக்கு ஒருவரினால் நிர்வகிக்கப்படும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

நான் இங்கிருந்து சென்ற போது நான்காம் தரத்தில் கல்வி கற்றேன் பின்னர் அங்கு சென்றதும் தரம் 9 வரை கற்றுள்ளேன். கல்வி கற்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு அச்சகமொன்றில் கடமையாற்றி வந்தேன். அவர்கள் எனக்கு உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்தனர்.

ஆனால், மாதாந்தம் கொடுப்பனவுகள் எதனையும் கொடுக்கவில்லை. எனக்கு வழங்கப்படும் சம்பளப் பணத்தை வங்கியொன்றில் கணக்கு ஆரம்பித்து அந்த வங்கிப் புத்தகத்தில் சேமிப்பு செய்து வந்தனர்.

அத்துடன் நான் இந்துவாக இருந்தாலும், பெளத்த ஆலயத்திற்கே வணக்க வழிபாடுகளுக்கா சென்றிருக்கிறேன். 11 வருடங்கள் என்கு சந்தோஷமாக இருந் தாலும் இப்போது எனது பெற்றோருடன் வாழும் நாட்களை யோசிக்கும் போது 11 வருடங்கள் பெரிதாக தெரியவில்லை.

தம்புள்ளை பிரதேசத்தில் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர் ஒருவர் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் அங்கு சென்று குறித்த இளைஞரை விசாரணை செய்த போது தான் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாயில் படித்தாகவும் அது தண்ணீரூற்றில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபற்றிய தகவல்கள் உரிய முறையில் பரிமாற்றப்பட்டுள்ளதுடன் மாங்குளத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகள் குறித்த இளைஞனின் பெற்றோர்களை அழைத்து தம்புள்ளைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள் ளனர்.

பின்னர் திட்டமிட்டபடி சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் அங்கு சென்று நீதிமன்றத் தினூடாக குறித்த இளைஞரை 11 வருடங்களின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.