24052022Tue
Last update:Mon, 23 May 2022

முதல் 10 இடங்களில் 9 இடங்களை பெற்று கொழும்பு மாவட்டம் சாதனை

02 sa 012015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை மேல் மாகாணம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் 6 இடங்களை கொழும்பு மாவட்டம் பெற்றுள்ளது.

முதலாம் இடத்தை விசாகா வித்தியாலய மாணவியும் இரண்டாமிடத்தை நாலந்தா கல்லூரியும் மூன்றாமிடத்தை தேவி பாலிகா வித்தியாலயமும் கைப்பற்றியுள்ளன.மூன்றாமிடத்தை இரு மாணவர்களும் 7 ஆம் இடத்தை இரு மாணவர்களும் 8 ஆமிடத்தை மூன்று மாணவர்களும் பெற்றுள்ளனர்.

1 ஆம் இடம் - சத்சரணி ஹெட்டியாராச்சி - விசாகா வித்தியாலயம், கொழும்பு

2 ஆம் இடம் - சாமல் புன்சர - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

3 ஆம் இடம் - ஆர்.எம். ரத்நாயக்க - தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு

3 ஆம் இடம் - ஐ. ரத்நாயக்க - மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி

4 ஆம் இடம் - எம்.எம். ரனிது அர்ஜூன ஹேரத் - நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

5 ஆம் இடம் - நெவிலி அமரஜித் வல்பிட்ட - ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

6 ஆம் இடம் - எம்.ஜே. இரூஷா நெத்சரா - பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

7 ஆம் இடம் - தருசா அன்ஜலிகா - சிறிசுமங்கலிகா பெண்கள் வித்தியாலயம் - களுத்துறை

7 ஆம் இடம் - டிநெத் சன்சுலா ஜயகொடி - மேரிஸ்டெலா கல்லூரி - நீர்கொழும்பு

8 ஆம் இடம் - டபிள்யூ.டி.ஐ. சதுரங்க விஜயசிங்க - ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

8 ஆம் இடம் - ஏ.எஸ். அமாயா நானயக்கார - சவுத்லன்ட்ஸ் கல்லூரி, காலி

8 ஆம் இடம் - டபிள்யூ.எஸ். டயஸ் வெல்லப்புளி - ராகுல கல்லூரி, மாத்தறை .