மலையக 5 ஆண்டு அபிவிருத்தி திட்டம் அங்குரார்ப்பணம்

5 yr development upcountry project launchமலையக அபிவிருத்திக்கான ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (10)  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தால் முன்வைக்கப்பட்ட குறித்த திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம், பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அமைச்சர்கள், பராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த அபிவிருத்தி திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிலையத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.