எத்தகைய குற்றச்சாட்டுகள் வரினும் சவால்களை எதிர்கொண்டு மக்களின் பொறுப்புக்கள் நிறைவேற்றப்படும்

President colty175127738 4122050 04042016 att cmyவெலிமடையில் ஜனாதிபதி

மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகவே 2015 ஜனவரி 08ல் மக்கள் நாட்டின் பொறுப்புக்களைத் தம்மிடம் ஒப்படைத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எத்தகைய விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோதும் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவுள்ளதாகத் தெரிவித்தார்.

நேற்று (04) முற்பகல் வெலிமடை ஸ்ரீ சங்ககிரி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயிலைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

புத்தபெருமான் கூட நிந்தனைகளுக்குள்ளானதையும் மகாத்மா காந்தி போன்ற சிரேஷ்ட தலைவர்கள் நாட்டுக்காக பணி செய்தபோது பல்வேறு குற்றச்சாட்டுகள்,விமர்சனங்களை எதிர்கொண்டதையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார்.

இன்று எமது நாடு முகங்கொடுத்திருப்பது அபிவிருத்தி அடைந்து வரும் சகல நாடுகளும் எதிரநோக்கும் பொதுவான பிரச்சினைகளையே. இந்த அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும்.

புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் சமய விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சமயஸ்த்தாபனங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.

பின்தங்கிய விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அங்குள்ள பிக்குகளுக்குத் தேவையான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தவும் ஒரு விசேட நிதியத்தை ஆரம்பிக்கவுள்ளோம். ஏனைய சமயஸ்த்தாபனங்களின் அபிவிருத்திக்கும் முக்கியத்துவமளிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். நேற்று காலை வெலிமட ஸ்ரீ சங்ககிரி விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.