“குளுக்கோமாவை தோற்கடிப்போம்” ஜனாதிபதி தலைமையில் நடைபவனி….

President 05 3 2016உலக குளுக்கோமா (glaucoma -கண் விழி விறைப்பு நோய்) வாரத்தை முன்னிட்டு ”குளுக்கோமாவை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளின்கீழ் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நடைபவனி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (11) காலை இடம்பெற்றது.

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நடைபவனி விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகி தேசிய கண் வைத்தியசாலைவரை இடம்பெற்றது.

சுகாதார பதிற்கடமைபுரியும் அமைச்சர் பைசல் காசீம், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம்.ரிபாஸ், தேசிய கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரதீபா சிறிவர்தன, கண் சத்திரசிகிச்சை நிபுணர்களான முதித்த குலதுங்க, சரித் பொன்சேகா மற்றும் முக்கியஸ்தர்கள் சுகாதார அமைச்சின் பணிக்குழாத்தினர் இந்நடை பவனியில் கலந்துகொண்டனர்.

01

03

04