திரு. லெஸ்லி தேவேந்திர ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு….

01 2இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயலாளர் திரு. லெஸ்லி தேவேந்திர அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. லெஸ்லி தேவேந்திர அவர்கள் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கையிலுள்ள ஒரு சிரேஷ்;ட தொழிற்சங்கத் தலைவரான திரு.லெஸ்லி தேவேந்திர  அவர்களுக்கு இப்பதவி அவரது தொழிற்சங்க வாழ்க்கையில் 52 வருடங்கள் நிறைவுபெறும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படுகிறது.

இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தை நாட்டின் மிகப்பெரும் பலம்வாய்ந்த தொழிற்சங்கமாக மாற்றுவதில் திரு. லெஸ்லி தேவேந்திர அவர்களுடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.