வடக்கில் பூரண ஹர்த்தால் இயல்பு முற்றாக பாதிப்பு

page 01 d 24022016 kaa cmyவல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால், யாழ்ப்பாணம் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இயல்வு நிலை பாதிக்கப்பட்டது. மாணவியின் கொலையைக் கண்டித்து வடக்கின் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, அனுதாப பனர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. பொது அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹர்த்தாலையடுத்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் 2 மணி நேரம் மூடப்பட்டிருந்தன.

தொழிற்சங்கங்கள் தமது ஒத்துழைப்பினை வழங்கியதுடன், ஆங்காங்கே கடைகள் சில திறந்ததுடன், சில கடைகளும் நாள் முழுவதும் மூடி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலைச் சம்பவத்தினை கண்டித்து முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவும் வழங்கினார்கள்.யாழ்.நகரப்பகுதி முழுவதும் வெறிச்சோடிக்கிடந்த நிலையில்,.நகரப்பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதேவேளை படுகொலையை கண்டித்து மன்னாரிலும் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் தனியார் பஸ்சேவைகள் இடம்பெறவில்லை. இதனால் உள்ளுர், வெளியூர் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது பயணத்தை தொடரவேண்டி நிலை ஏற்பட்டது.

அதேபோன்று வட மாகாணம் தளுவிய ரீதியில் நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் மன்னாரிலும் மாவட்ட சட்டத்தரணிகள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். அதனால் மன்னார் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெறாத நிலையில் வழக்குகள் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்திலும்நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது அரச திணைக்களங்கள் வழமைபோல் இயங்குகின்ற போதிலும் மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவதில் குறைவாகவே காணப்பட்டது.

பாடசாலைக்கு மாணவர்களின் வருகையின்மையால் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்தகங்கள், தேனீர் சாலைகள் திறந்திருந்த போதிலும், ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது