அரிசி இறக்குமதி வரி அதிகரிப்பு; நேற்று நள்ளிரவு அமுல்

images 31012016 kaa cmyவெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கான இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதன்படி இதுவரை 35 ரூபாவாக இருந்த இறக்குமதி வரி தற்போது 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி போதுமானளவு கையிருப்பில் உள்ளதாலும் தேசிய விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கிலுமே இறக்குமதிக்கான வரியை அதிகரித்ததாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார். மொனராகலை, புத்தளவிலுள்ள களஞ்சியசாலையை திறந்து வைத்த சந்தர்ப்பத்திலேயே நிதியமைச்சர் இத்தீர்மானத்தை அறிவித்தார்.