”விக்கிரமாதித்யா” கப்பலை ஜனாதிபதி பார்வையிட்டார்.

President1 7இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய யுத்தக் கப்பலான ”விக்கிரமாதித்யா” கப்பலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (23) முற்பகல் பார்வையிடச் சென்றார்.

”சூரியனைப்போன்று சக்தி வாய்ந்த” எனும் பொருள்கொண்ட விக்கிரமாதித்யா கப்பல் 284 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்டுள்ளதுடன், ஒரே தடவையில் 36 யுத்த விமானங்களை இதில் போக்குவரத்துச் செய்ய முடிவதுடன், 1700 பணிக்குழாத்தினரைக் கொண்ட இக்கப்பல் 22 மாடிகளைக் கொண்டுள்ளது.

 இலங்கை கடற்படைக்கும் இந்திய கடற்படைக்குமிடையில் நிலவும் நட்புறவினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வந்துள்ள விக்கிரமாதித்யா கப்பலுக்கு பொறுப்பான சிரேஷ்ட உத்தியோகத்தராக ரியர் அத்மிரால் ரவிநீட் சிங் அவர்களும் கப்பலின் கட்டளையிடும் உத்தியோகத்தராக கிருஷ்ணா சுவாமிநாதன் அவர்களும் பணியாற்றுகின்றனர்.

கப்பலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தியதுடன் நினைவுப் பேழையும் வழங்கிவைக்கப்பட்டது.

6 2 10 9 7 4 5