பிரதமர் இன்று சுவிஸ் பயணம்!

66e333383786289ab1eae6e37fd4ab10 Lஉலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (19)  செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்துக்கு பயணமாகின்றார்.

நாளை (20) முதல் 23 ஆம் திகதி சனிக்கிழமை வரை சுவிட்சர்லாந்து டாவோஸ் க்லொஸ்டர் நகரில் இந்த உலகப் பொருளாதார மாநாடு இடம்பெறவுள்ளது.

இலங்கையின் தலைவர் ஒருவர் டாவோஸ் இல் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டிற்காக அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும். நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் போது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சர்வதேச பொருளாதாரத்தின் புதிய முன்னேறறங்கள் தொடர்பாக இந்த மாநட்டில் ஆழமாக ஆராயப்படவிருக்கின்றது. சுமார் 40 நாடுகளின் தலைவர்களும், 2500 பொருளாதார நிபுணர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

உலகத் தலைவர்களின் கருத்துப் பரிமாறல்களூடாக திட்டங்களை ஒருமுகப்படுத்திக் கொண்டு பூகோள மற்றும் பிராந்திய பொருளாதார நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதில் மாநாடு முக்கிய கவனம் செலுத்தவுள்ளது.

பிரதமர் தலைமையில் செல்லும் இலங்கைக் குழுவில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்திச் செயற்பாடுகள், சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஆகியோர் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.