தேசிய அரசு அமைக்கும் சு.கவின் சகல கோரிக்கைகளும் நிபந்தனையின்றி ஏற்பு

tkn 08 24 nt 05 ndkகண்டியில் பிரதமர் அறிவிப்பு

* ரணிலின் மூன்றாவது புரட்சியாக விவசாய சீர்திருத்தம் அமைய வேண்டும்

* மகாநாயக்க தேரர்கள் வாழ்த்து

 தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சகல கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று விஜயம் செய்திருந்த பிரதமர், மல்வத்துபீட மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். மல்வத்துபீடத்தின் பீடாதிபதி திப்பட்டுவாவே மஹாநாயக்க தேரரைச் சந்தித்தபோதே பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கம் அமைக்கவேண்டும் என்ற நோக்கத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன் வைத்த கோரிக்கையை நிபந்தனைகள் எதனையும் முன்வைக்காமல் அவற்றை ஏற்றுக்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அதேநேரம், சர்வதேச ரீதியில் அங் கீகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பிரத மராகப் பதவியேற்றிருப்பது மகிழ்ச்சி யளிப்பதாக அஸ்கிரிய பீடாதிபதி கலகம ஸ்ரீ அத்ததன்சி தேரர் கூறினார்.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பிரதமருக்கு வலிமை, தைரியம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் ஆசீர்வதித்தார். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை

என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என அஸ்கிரியபீடாதிபதி, பிரதமரின் கோரிக்கைவிடுத்தார்.

கடந்த ஆறு மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆட்சிசெய்த ஐ.தே.க அரசாங்கம், நாட்டை முன்கொண்டு செல்வதற்கு பலமாக கால்பதித்து, செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தலதாமாளிகையில் நடைபெற்ற மத வழிபாடுகளைத் தொடர்ந்தே பிரதமர், அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீடாதிபதிகளை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை புதிய அரசாங்கத்துக்குள் கொண்டுவந்து பிரதமர் ஏற்படுத்தியிருக்கும் புதிய அரசியல் பாதைக்கும் மகாநாயக்க தேரர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கண்டி மல்வத்த பீடாதிபதி

பிரதமர் ரணிலுக்கு ஆசி

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் தூரநோக்கு கொண்ட ஒரு சிறந்த அரசியல் வாதியாகவும் பல்வேறு சிறப்புக்களை கொண்ட பிரதமராகவும் விளங்குவதாக கண்டி மல்வத்த பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் புரட்சி கடந்த பாராளுமன்ற தேர்தல் புரட்சிகளை சிறந்த வகையில் நடத்தி சாதனை படைத்த அவர் இந்நாட்டின் விவசாய மக்களின் நல மேம்பாடுகளை கவனத்தில் கொண்டு மூன்றாவது புரட்சியாக விவசாயப் புரட்சியையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கண்டி மல்வத்தை பெளத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தெரிவித்தார்.

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மல்வத்த விகாரையின் போயா மண்டபத்தில் நேற்று (23) காலை அளிக்கப்பட்ட விசேட பிரித் வைபவத்தின் போதே மகாநாயக்க தேரர் அவரை ஆசீர்வாதித்து மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (23) காலை கண்டிக்கு விஜயம் செய்திருந்தார்.

பிரதமருடன் கட்சி தவிசாளர் மலிக் சமரவிக்ரம, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எம். எச். ஏ. ஹலீம், ரவூப் ஹக்கீம் உட்பட பல புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் சமுகமளித்திருந்தனர்.

பிரதமர் ரணில் விக்ரம சிங்க தலைமையிலான இக்குழுவினர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதுடன் அஸ்கிரிய பெளத்த பீடத்திற்குச் சென்று மகாநாயக்க தேரர் கலேகம ஹந்த தஸ்ஸி அவர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் மல்வத்த பெளத்த பீட மகாநாயக்க தேரர் திப்பட்டு வாவே ஸ்ரீ சுமங்கல தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க 27 வயதாக இருக்கும் போதே சிறு வயதில் பியகம தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி உயர்கல்வி தொழில்நுட்ப அமைச்சராக விளங்கி சிறந்த சேவையாற்றி வந்துள்ளார்.

பாடசாலை வயதிலும் ரோயல் கல்லூரியில் சிறந்த மாணவனாக விளங்கியதுடன் சட்டக் கல்லூரியி லும் சிறந்த சட்ட மாணவனாக விளங் கியுள்ளார்.

இந்த நாட்டில் அமைச்சராகவும் பிரதமராகவும் விளங்கிய ரணில் விக்ரம சிங்க 20 வருடங்களாக பொறுமையுடன் எதிர் கட்சித் தலைவராகவும் விளங்கி வந்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்து பல்வேறு திட்டங்களை முன்வைத்து செயல்பட்டுவந்ததன் காரணமாகவே நான்காவது தடவையாகவும் இன்று பிரதமர் பதவியை ரணில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பெரும் பங்களிப்பை வகித்தார்.

அதன்பின்னர் பாராளுமன்றத்தில் சிறுபான்மையான பலத்தைக் கொண் டிருந்து பிரதமராக விளங்கி 100 நாள் திட்டங்களை மிக திறமையாக செயல்படுத்தி சாதனை படைத்ததுடன் ஜனாதிபதியுடன் இணைந்து பொதுத் தேர்தலையும் மிக அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்தி சாதனை படைத்து வெற்றியும் கண் டுள்ளார்.