அரசுடன் செயற்படுவது தொடர்பில் எம்.பிக்களுடன் பேசி முடிவு

tkn mavai 2011புதிய அரசாங்க த்துடன் கூட்டிணை ந்து செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின்.

 தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை என்றாலும், மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு வழங்கி யுள்ளனர். அவர்கள் எங்கள் மீது வைத் துள்ள விசுவாசத்துக்கு நாடா ளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்பாட்டுடன் செயற் படுவார்கள் என்றார். தொங்கு நாடாளு மன்றம் ஏற்பட்டால் நிலையான அரசை அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா? என ஊடக வியலாளர் ஒருவர் இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறானதொரு முடிவை கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் களுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என்றார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொள் வீர்களா? எனக் கேட்டதற்கு பதிலளித்த மாவை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்கமாட்டார்கள் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், தேசிய அரசாங்கத்தில் கடமையாற்றக் கூடியதாக இருக்கும். இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கான முன்மொழிவு களைக் கொண்டுவரவேண்டும். தேசிய சபையாக நாடாளுமன்றம் கூடக்கூடிய நிலைமை இருக்கின்றது. தேசிய அவையில் ஆராய்ந்து தீர்மானம் மற்றும் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இருக்கின்றோம் என்று மேலும் கூறினார்.