வெற்றி, தோல்வி வேறுபாடுகளை மறந்து தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்

tkn 08 19 rm 92 ndk“வெற்றிபெற்றோர் தோல்வியுற்றோர் என வேறு பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் மக்களாக இணைந்து செயற்பட்டு நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நவீன யுகத்தின் சவால்களை எதிர்கொண்டு நம் தாய்நாட்டை உலகளவில் உயர்த்த ஏகமனதாய் நின்று தோள் கொடுப்போம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேகர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை யடுத்து பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் இதில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

ஜனவரி 8ம் திகதிய புரட்சியை அடிப்படையாக்கிக் கொண்டு நல்லாட்சி மற்றும் இணக்கப்பாட்டு அரசியலை எதிர்காலத்திலும் முன்னெடுப்பதற்கு நாட்டின் பெரும்பாலான மக்கள் அங்கீகாரமளித்துள்ளனர்.

தேர்தல் காலம் முழுவதிலும் மக்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சுதந்திரமும் நீதியுமான தேர்தலை நடத்துவதற்கான அமைதியான சூழலை ஏற்படுத்த இத்தேர்தலில் எம்மால் முடிந்துள்ளது.

இந்த சிறந்த சூழலை நிலையாகப் பாதுகாத்துக்கொள்வது எமது பொறுப்பாகும். வெற்றிபெற்றோர், தோல்வியடைந்தோர் என்று வேறு பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. ஒரு தாய் மக்களாக நாம் இந்த நாட்டில் புதியதொரு அரசி யல் கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஒன்றிணைவோம்.

நவீன யுகத்தின் சவால்களை எதிர் கொண்டு எமது தாய்நாட்டை உலகளவில் உயர்த்துவதற்கு ஒரு மனதாய் தோள் கொடுப்போம்.

இந்த சவாலான செயற்பாட்டிற்காக எம்முடன் ஒன்றிணையுமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக் கின்றேன்.

நாம் ஒன்றிணைந்து ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்குவோம். இணக்கப் பாட்டு அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்பு வோம் அனைவருக்கும் சமமான வாய்ப் புடனான புதிய நாட்டை கட்டியெழுப்பு வோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.