ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

tkn 08 12 nt 04 pgiஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததும் ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கணிசமான சம்பள உயர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆடைத் தொழில் ஏற்றுமதியாளர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மிக விரைவில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கவு ள்ளதாகவும் அச்சலுகை கிடைத்தவுடன் உடனடியாகவே அனைத்து ஊழியர்களுக்கும் கணிசமான சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் பிரதமர் விடுத்த நிபந்தனையை நேற்று அனைத்து ஏற்றுமதியாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அலரி மாளிகையில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆடைத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர்கள் தமது ஏகமனதான இணக்கத்தைத் தெரிவித்துள்ளனர். நேற்று இந்த பேச்சு வார்த்தையையடுத்து முன்னாள் பிரதி நிதியமைச்சர் ஹர்ச டி சில்வா ஊடகவிய லாளர்களுக்கு பிரதமரின் சார்பில் விளக்கமளித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக் கையில்,

பிரதமருக்கும் ஆடைத்தொழில் ஏற்றுமதியாளர்களுக்கிமிடையில் இன்று சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போது ஆடைத்தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித்துறை தொடர்பில் பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரை யாடப்பட்டன.

இதன் போது மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பது சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட விடயங்கள் இங்கு கவனத்திற் கொள்ளப்பட்டன. சமூக பொருளாதாரத்தின் முக்கியத்துவம் இங்கு வெளிப்பட்டது.

ஆடைத் தொழில்துறை மட்டுமன்றி பல்வேறு துறைகளுக்கும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைக்கவுள்ளது. ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை கிடைப்பதற்கு முன் தடைசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்படவுள்ளது.

மிக விரைவில் இத்தடை நீக்கப்படும். அதன் பின்னர் மீனவர்கள் தமது ஏற்றுமதி நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். ஏற்றுமதித் துறையினருடன் பிரதமர் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரதி பலனாக இதனைக் குறிப்பிட முடியும்.

சில வேளைகளில் எமக்கு எதிராக விமர்சனங்கள் எழுகின்றன. இலங்கையில் சம்பளம் அதிகமென்றும் அதனால்தான் முதலீட்டாளர்கள் பங்களாதேஷ¤க்குச் செல்கிறார்கள் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

நாம் இதை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இலங்கையில் சம்பளம் குறைவாகவே உள்ளது. எந்த வகையிலும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

அதிகரித்த சம்பளத்திற்கேற்ப உயர்ந்த தரத்திலான உற்பத்திகள் இடம்பெறுவது முக்கியம் என்பதையே நாம் வலியுறுத்து கிறோம்.

ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடு களில் அதிகரித்த சம்பளம் வழங்கப்படுகிறது. அவ்வாறானால் அங்குள்ள முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரவேண்டுமே என்ற தர்க்கத்தையும் எம்மால் முன்வைக்க முடியும். எனினும் அங்கு அதிகரித்த சம்பளத்திற்கேற்ப தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கையில் இன்னும் கூட அது முடியாமலிருக்கின்றது. அதுவே இலங்கைக்கும் அந்த நாடுகளுக் குமிடையிலான வித்தியாசம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எமது ஆடைத் தொழில் ஏற்றுமதியாளர்களிடம் இன்று மிக உறுதியாகக் கூறிய ஒரு விடயம் ஆடைத் தொழில் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவது முக்கியமாக வேண்டும் என்பதே.

“நாம் உங்களுக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலு கையைப் பெற்றுத்தருகிறோம். அதற்கு நிபந்தனையாக ஆடைத்தொழில்துறை ஊழியர்களுக்கு கணிசமான அளவு சம்பள அதிகரிப்பு வழங்குவது உறுதியாக வேண்டும்” என பிரதமர் கேட்டுக்கொண்ட போது ஏற்றுமதியாளர்கள் ஒரே குரலாக அதற்கு இணக்கம் தெரிவித்தனர். இதற்கிணங்க ஊழியர்களுக்கான ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவும் முறையாக வழங்கப்படுவதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.