காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தால் உரிமையாளர்களிடம் வழங்கப்படும்

நல்லாட்சியை நிலைப்படுத்த ஐ. தே. . உழைக்கும்

n 6bநாட்டில் எப்பகுதியிலும் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என எவரது காணிகளையாவது அரசாங்கம் எடுத்திருந்தாலும் அவை கண்டிப்பாக மீள வழங்கப்படும். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

 ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர்:- 100 நாட்களில் அரசாங்கம் தொட்டபணியைத் தொடர தேர்தலில் ஐ.தே..வுக்கு மக்கள் பூரண ஆதரவு வழங்குவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:

அனைத்து யுகத்திலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சியே.

நாட்டில் அபிவிருத்தியும் சமாதானமும் ஐக்கியமும் நிலைக்க வேண்டுமெனில் ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே அவற்றை நிலைநாட்ட முடியும்.

ஜனவரி 8ம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை பெரும்பாலும் நிறைவேற் றியுள்ளது. பிரதமரின் வழிகாட்டலில் பல திட்டங்களை புரட்சிகரமாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்னெடுத்துள்ளார். நூறு நாட்களில் சுபீட்சமான சமூகங்களைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

இது தொடர்வதற்கு தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒன்றினைத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை பங்களிப்புச் செய்வது முக்கியம். ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசியக் கட்சி எனவே அந்த கட்சியை பலப்படுத்துவது மக்களின் பொறுப்பு.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைச் சுமையைம் குறைக்கும பல திட்டங்கள் நிறைவேற் றப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கில் மக்களின் காணிகளை மீளக் கையளிக்க நீதிமன்றம் உத்தரவளித்துள்ள நிலையில் நாம் அதனை படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்றில்லாது எவரது காணியை அரசாங்கம் எடுத்திருந்தால் அது உறுதியாக மீள வழங்கப்படும்.

மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என பல பகுதிகளிலும் இப்போது காணிகள் மீளக் கையளிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் பத்து இலட்சம் வேலை வாய்ப்பை எமது அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும். வடக்கு கிழக்கு உட்பட பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றை நிறைவேற்ற மக்கள் எதிர்வரும் தேர்தலில் ஐ. தே. . வுக்கு வாக்களித்து நாட்டில் எழுச்சியொன்றை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.