தேசிய அரசாங்கத்தில் சகல கட்சிகளுக்கும் அதிகாரங்கள் பகிர்வு

இனவாதத்தை தூண்டுகிறது மஹிந்த தரப்பு; வெள்ளைவான் கலாசாரத்தை உருவாக்கவும் முயற்சி

n 29“தேர்தலில் வெற்றி பெறும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்க மொன்றை உருவாக்குவதோடு, பொறுப்புக்களையும் சகல கட்சிகளுக்கும் பகிர்ந்தளித்து நாட்டை அபிவிரு த்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

அதேநேரம் விருப்பு வாக்கு முறையில் அமையும் இறுதித் தேர்தலாக இந்தத் தேர்தல் அமையும். இதில் மஹிந்த தரப்பு இனவாதத்தைத் தூண்டி மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். அப்படியானவர்கள் மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை கொண்டு வருவார்களெனவும் பிரதமர் தெரிவித்தார்.

கம்பளை புதிய சந்தைப் பகுதியில் நேற்று முன்தினம் (27) தோட்டத் தொழிலாளர் களுக்கு நிவாரணம் வழங்கி வைக்கும் வைபவமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் அங்கு தொடர்ந்து உரையாற்று கையில்,

தேர்தலில் வெற்றிபெறுகின்ற அனைத்து கட்சிகளையும் நாம் இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்த ஐ. தே. க. முடிவு செய் துள்ளது.

நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் ஐ. தே. க வரலாறு காணாத வகையில் இம்முறை வெற்றியை சந்திக்கவுள்ளது. இதன் மூலம், பாராளுமன்றில் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அவர்கள் திருப்தி பெறும் வகையிலான அதிகாரப் பொறுப்புகளை பகிர்ந்தளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் மட்டுமே எமது நாட்டை முறையான ஜனநாயக வழியில் அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய விடயங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

கடந்த அரசாங்கத்தில் என்ன நடந்தது? அதிகாரங்கள் அனைத்தையும் தனியாகப் பகிர்ந்துகொண்டு ஜனநாயகச் செயற் பாடுகளை குழிதோண்டி புதைத்திருந்தன.

இவ்வாறு அதிகாரங்களைக் கையிலெ டுத்துக்கொண்டு ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஆகவே நாட்டில் உண்மையான அபிவிருத்தியொன்று இடம்பெறவேண்டுமானால் அனைத்து தரப்பினர்களினது ஒத்துழைப்புகளுடன் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதினைக் கொண்டே அதனை சாதகப்படுத்த முடியும்.

இந்நிலையில், அனைத்துக் கட்சித் தரப்பினர்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் நிலைமைகளை கருத்திற் கொண்டு அவர்களது ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் செவிமடுத்து அவர்களின் அபிலாஷைகளை செய்ய வேண்டிய தேவையையும் நாம் உணர்ந்துள்ளோம். அப்போது தான் நாட்டின் இறைமையை நாட்டு மக்கள் முன்னெடுத்து செல்வார்கள்.

இந்த வகையில் நாம் நாட்டில் உள்ள அராஜக நிர்வாகத்தை அழித்து நல்லாட்சியொன்றை ஏற்படுத்தும் முகமாக அனைத்து வகையிலான கட்சி அமைப்புகளினது பிரதிநிதிகளை ஒன்றுசேர்த்து ஜனாதிபதியை தெரிவு செய்தோம். நல்லாட்சி திட்டமொன்றினை ஏற்படுத்தி அத்திட்டங்களை செயல் முறையில் நடாத்தியுள்ளோம். இன்று தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணங்களும் உதவிகளும் கூட அந்த நூறு நாள் திட்டத்தை சேர்ந்ததாகும். தொடர்ந்தும் எமது நல்லாட்சிக்கான வேலைத் திட்டங்கள் நடைபெறும் என்பதில் எந்தவித ஐயமும் எமக்குக் கிடையாது.

கடந்த 8 ஆம் திகதி மஹிந்த கட்சியை வீட்டுக்கு அனுப்பியிருந்தும் ஓய்வு கிடைக்கவில்லை. ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. தற்போது நாட்டில் மீண்டும் இனவாதத்துக்கு தூபமிட்டு மக்களை குழப்புகின்றனர். மீண்டும் இவர்களை முழுமையாக ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐ. தே. க. தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும். ஆட்சியையும் அதிகாரத்தையும் அனுபவிப்பதற்காக அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆட்சியை அமைப்போம் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ம.மா சபை உறுப்பினர்கள் ஐ. தே. க வினது நாவலப்பிட்டி கம்பளை அமைப்பாளர்கள் உட்பட பல பொதுமக்களும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.