வெளிவிவகார சேவைக்கு ஆட்சேர்ப்பு: அரசசேவை ஆணைக்குழுவிடம் பணிகள்

n1506032இலங்கை வெளிவிவகார சேவையில் இம்முறை புதிதாக இணைத்துக்கொள் பவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அரச சேவை ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

அந்தவகையில், இலங்கை வெளிவிவகார சேவையை உலகிலேயே முதல்தர சேவையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை வெளிவிவகார சேவையில் புதிதாக ஆட்களைச் சேர்த்துக் கொள்வதற்கான இறுதிக் கட்டப் பணிகள் முன்னெடுக் கப்படுகின்றன. எவ்வித அரசியல் செல்வக்கும் இல்லாத வகையில் தராதரம் அடிப்படையிலேயே இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்பட வேண்டுமென்பதில் அரசாங்கம் உறுதியான கொள்கையை கொண்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கான பரீட்சையில் சிததியடைந்த வர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளன. இதில் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடமோ பிரதியமைச்சரான என்னிடமோ எவரும் சிபாரிசு கோரி வரவில்லை. நாம் யாரையும் சிபாரிசு செய்யப் போவதுமில்லை.

நேர்முகப் பரீட்சையில் அநேகமானோர் ஒரே புள்ளிகளைப் பெற்றிருப்பதனால் வெட்டுப் புள்ளியொன்றின் அடிப்படையில் ஆட்களை தெரிவு செய்யும் பொறுப்பு அரச சேவை ஆணைக்குழுவிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வெளிநாட்டிலுள்ள தூதரங்களில் உள்ள உயர் பதவிகளுக்கான வெற்றிடங்களுக்கு தகுதியடிப்படையில் மிகவும் பொருத்தமானவர்களே நியமிக் கப்பட்டிருப்பதாகவும் பிரதியமைச்சர் இதன்போது சுட்டிக் காட்டினார்.