சம்பூர் மீள்குடியேற்ற காணி விவகாரம்: பிரச்சினையை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்க முயல்கிறோம்

tkn kp Sumanthiran pmjசம்பூர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடி யேற்றப்படுவார்கள் என்பது பல்வேறு அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழி. இந்த நிலையில் சம்பூர் காணிகள் விடுவிப்புக்கு நீதிமன்றத் தடையுத்தரவால் ஏற்பட்டி ருக்கும் புதிய பிரச்சினையை நீதிமன்ற த்தின் ஊடாகத் தீர்ப்பதற்கு எதிர்பார்த் திருப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சம்பூர் காணிகளை விடுவித்து அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த அரசாங்கமும் இந்த அரசாங்கமும் உறுதிமொழி வழங்கியிருந்தன.

சம்பூர் காணிகளை விடுவிக்க முடியும் என 2007ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கம் உயர்நீதிமன்றத்திலேயே உறுதிமொழி வழங்கியிருந்தது. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பூர் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்ததாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கம் சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.

இதற்கு எதிராக சில நிறுவனங்கள் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவைப் பெற்றுள்ளன. சம்பூர் காணி விடுவிப்புத் தொடர்பில் அப்பகுதி மக்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பூர் காணி விடுவிக்கப்படும் என்ற அடிப்படையில் இதன் வழக்கு விசாரணை யூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் 21ஆம் திகதி விசாரணையின் போது இதனைச் சுட்டிக்காட்டவுள்ளோம்.

அது மட்டுமன்றி இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக இடைமீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் சுமந்திரன் எம்பி சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங் கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். முன்னைய, தற்போதைய அரசாங்கங்களால் உறுதிமொழி வழங்கப்பட்ட சம்பூர் மீள்குடியேற்ற விடயத்தில் காணப்படும் தடைகளை நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்த்துக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.