புதிய அரசியலமைப்பின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது

19 இல் அதிகாரப் பகிர்வு உள்ளடக்கப்படவில்லை

n222தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்டிருப்பதால் புதிய அரசியல மைப்பொன்றைத் தயாரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அரசியலமைப்பு சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும், தகவல் அறியும் சட்டம், மத்தியில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பகிர்ந்து கொள்ளவது போன்றவற்றை உள்ளடக் கியதான புதிய அரசியலமைப்பொன்றே தற்பொழுது தேவையாகவுள்ளது. என த இந்து பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.

“தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு பல தடவைகள் மாற்றப்பட்டுள்ளது. இதனை வைத்துக் கொண்டு முன்செல்ல முடியாது” எனச் சுட்டிக்காட்டியிருக்கும் ஜயம்பதி விக்ரமரட்ன, 19ஆவது திருத்தச்சட்டமூலம் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல விடயங் களை உள்ளடக்கியிருக்க வில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்து வதற்கு உத்தேச தகவல் அறியும் சட்டமூலம் மிகவும் முக்கியமானது. உத்தேச தகவல் அறியும் சட்டம் அரசியல், சமூக உரிமைகள் மட்டுமன்றி பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்தியில் மையப்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரங்கள் மாகாண மட்டங்களில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு செய்வதானது மத்திய அரசாங்கத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்றும் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.