மின் கம்பி அறுந்து விழுந்து தந்தையும் மகனும் பலி

சுன்னாகத்தில் பரிதாபம்

யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் தந்தையும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரி ழந்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 2.45 அளவில் சுன்னாகம் ஐயனார் கோவில் வெள்ளவாய்க்கால் ஒழுங்கையில் இடம்பெற்றது.

சுன்னாகத்தில் நேற்று பிற்பகலில் கடும் காற்றுடன் மழை பெய்தது. இதன் போது வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மேற்படி இருவரின் மீதும் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் அந்த இடத் திலேயே இருவரும் துடிதுடித்து உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் 28 வயதான தந்தையும் 08 வயதான மக னுமே உயிரிழந்துள்ளனர்.

கடுங்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பெய்த அடைமழை காரணமாகவே மேற்படி மின்சார கம்பி அறுந்து விழுந்ததாக பொலிஸார் கூறினர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரு கின்றனர்.