கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு

n 11 2ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கதிர்காம புனித நகருக்குச் சென்று மதக்கடமைகளில் நேற்று ஈடுபட் டார். முதலில் கிரிவிஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு அவர் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். கிரிவிகாரை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மின்த தேரரையும் சந்தித்த அவர் சுகநலன் விசாரித்தார்.

 

பிரித் பாராயணம் நிகழ்த்தப்பட்டு ஜனா திபதிக்கு ஆசீர்வாதமும் செய்யப் பட்டது. பின்னர் முருகன் ஆலயத்துக்கு சென்ற அவர் பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் கரு ஜயசூரிய, சாகல ரத்நாயக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.