வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு அவசியம்: டியு.குணசேகர

வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் ஆளும், எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் கடந்த காலங்களில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியது.

இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தெளிவுபடுத்தினோம்.

தற்போதைய அரசாங்கம் கடந்த கால குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காத்திரமான வெளிவிவகார கொள்கைகளை உருவாக்குவதில் ஆளும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு அவசியம்.

உலகப் பயங்கரவாதம் மாறுபட்ட ஓர் திசையில் நகர்கின்றது. இந்த நிலைமகளை நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.

ஐ.எஸ். கெரில்லாக்களின் பிரச்சினை பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.

தமது நாட்டின் செயற்பாடுகளும் இவ்வாறான பயங்கரவாத அமைப்புக்கள் உருவாக காரணியாக அமைந்தது என்பதனை அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது என டியு.குணசேகர நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.